வாசகர் வட்டத்திலிருந்து…
[http://charuonline.com/blog/?p=2266]
சாரு நிவேதிதா ஒரு வருடத்திற்கு முன்பு வரை எனக்குப் பரிச்சயமில்லாத பெயர். இன்றோ நான் charuonline.com மற்றும் “சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” செல்லாமல் எந்த நாளையும் கழிப்பதில்லை. முன்பு ஒரு முறை ஆனந்த விகடனில் சாருவின் “ஏடா கூடப் பேட்டி” படித்தேன். அதுதான் அவரது எழுத்தில் நான் முதலில் படித்தது. பின், அதே ஆனந்த விகடனில் வெளிவந்த “மனம் கொத்திப் பறவை” சாரு என்ற ஜீனியஸை வெகுஜன மக்கள் அறியச் செய்தது. உலக இலக்கியம் மற்றும் இசையை வாசகர்கள் அறியச்செய்த தொடர். Practicing Hedonism, Existentialism, Post Modernism, Surrealism போன்ற சொற்களை வெகுஜன பத்திரிகை வாசகர்களிடம் அறிமுகம் செய்த அற்புதமான ஒரு தொடர் ["கற்றதும் பெற்றதும்" காலத்திற்கு பிறகு ஆனந்த விகடனை நான் தொடர்ந்து வாங்கியது "மனம் கொத்திப் பறவை" வெளிவந்த காலத்தில் தான்]. ”மனம் கொத்திப் பறவை” நிறைந்த பிறகு சாரு எந்த இதழில் எழுதுகிறார் என்ற ஒரு புரிதல் இல்லாத நிலையில் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். ”Dear Mr. Charu Nivedita” என்று எழுதியிருந்தேன் [முன்பு ஒரு முறை சுஜாதாவிற்கு "Hi Sujatha" என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதற்கு அவரிடம் இருந்து பதில் வராததால் நான் அழைத்த முறை தான் தவறு என்று எண்ணியிருந்ததால்]. சாருவிடமிருந்து பதில் வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் உடனே பதிலளித்திருந்தார். ”Hi Charu” என்றே அழைக்குமாறு கூறியிருந்தார். இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வாசகனை கூட ஒரு நண்பனைப்போல் பாவிக்கும் மனப்பக்குவம் வேறு எந்த தமிழ் எழுத்தாளரிடமும் எதிர் பார்க்க இயலாத ஒன்று. பிறகு, charuonline.com படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது “மனம் கொத்திப் பறவை” சாரு நிவேதிதா என்ற சமுத்திரத்தின் ஒரு துளி என்று! இந்த இணையதளம் தான் “Zero Degree” என்ற அற்புத சிருஷ்டி யை படிக்கத் தூண்டியது. இப்படி ஒரு Magnum Opus நாவலை தமிழில் கண்டிப்பாக வேறு யாரும் எழுதி விட முடியாது. Auto Fiction ஐயும் Post Modernism ஐயும் வேறு எந்த படைப்பும் இவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது. பிறகு, Facebook மூலமாக “சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” அறிமுகம் ஆனது. எவ்வளவு துடிப்பான ஒரு பகுதி! சாருவின் மேல் பெருமதிப்பும் சக வாசக வட்ட நண்பர்கள் மேல் அன்பும் கொண்ட எவ்வளவு அருமையான தோழர்கள்! இப்படி ஒரு கொண்டாட்டமான ஒரு வாசகர் வட்டம் வேறு எந்த எழுத்தாளருக்கும் அமைவது என்பது அந்த எழுத்தாளர் அவரது வாசகருக்கு தரும் வாசிப்பு அனுபவத்தைப் பொருத்தது. சாரு நமக்குத் தரும் Wisdom க்கு ஈடாக நாம் அவருக்கு என்ன செய்து விட முடியும்?
கார்த்திக் சேதுமாதவன்
No comments:
Post a Comment
Your comment goes here...