நிற்க.
நண்பர்
வீர ராஜ சேகரன் (இனி வீரா) என்னோடு கல்லூரியில் படித்தவர். தஞ்சாவூரை
சேர்ந்தவர் என்பதால் திருவையாற்றை பற்றியும் அசோகாவைப் பற்றியும் ஒருவாறு அறிந்து வைத்திருந்தார்.
நான்
திருவையாறு என்பது தெரிந்ததும் பிடித்துக் கொண்டு விட்டார்.
நானும்
சாக்கு போக்கு சொல்லி ஒரு நாள் வசமாக சிக்கிக் கொண்டு விட்டேன். அசோகா வாங்கி வருவதாக
சூடம் ஏற்றி சத்தியம் செய்த பிறகு, நிலக்கடலையும் சேர்ந்து கொண்டு விட்டது. திருவையாறில் நிலக்கடலை
பிரசித்தம் என்பது இன்று வரை அங்கு வசிப்பவர்கள் யாருக்குமே தெரியாது. ஆனால்
வீரா பெரிய உருவிலான நிலக்கடலை கிடைத்தே தீரும் என்று தீவிரமாக நம்பினார்.
இது
இவ்வாறு இருக்கையில், ஒரு முறை
திருவையாறு சென்று விட்டு பெங்களூருக்கு திரும்புகையில் வீராவுக்கு செய்த சத்தியம்
நினைவில் வந்து தொலைத்தது. நேரே ஆண்டவருக்கு சென்று அசோகா பாக்கெட்டுகள்
வாங்கி திரும்பும் போது நிலக்கடலை
ஞாபகம் வந்தது. அதை மட்டும் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் வாங்கி விடலாம்
என்று நினைத்த போது அது வீராவுக்கு செய்யும் துரோகமாக தெரிந்து பிறகு வாங்கிக்
கொள்ளலாம் என்று அந்த முடிவைக் கை விட்டேன்.
மறு
நாள், அலுவலகம்.
வீரா வரவே இல்லை.
அடுத்த
நாள், வீட்டிலுருந்த
படியே வேலை செய்வதாக தகவல்.
மூன்றாவது
நாள் (இதற்கிடையே ஒரு பாக்கெட் காலி), வரவே இல்லை.
அன்று இரவு
எனக்கு 10.30 மணி வரை
எனக்கு Meeting. பசி
வேறு. அவ்வளவு அசோகாவையும் எப்படி தனியே சாப்பிடுவது என்று நினைத்த போது, நண்பர் சிவசுப்ரமணியத்தின்
ஞாபகம் வந்தது. ஒரு Escalation
ல் இருந்தவர் அசோகா என்றதுமே உடனே வந்து விட்டார். மற்றொரு நண்பர்
அருட் செல்வனையும் அழைத்து வர சொல்லியிருந்தேன்.
மூவருமாக
சேர்ந்து அசோகாவை காலி
செய்த போது வீராவுக்கு செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது.