”Zero Degree – நான் படித்தமுதல் பின் நவீனத்துவ நாவல். முதல் 50 பக்கங்கள் படித்து ஒன்றுமே புரியவில்லை, மீதமிருக்கும் பக்கங்களை எப்படி படிக்கப் போகிறேன் என்று நினைத்த போது பெரும் மலைப்பு தான் ஏற்பட்டது.
பின் நவீனத்தைப் பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில் அது சாரு வின் வாழ்க்கை தான் என்று அறிந்த போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை எவ்வாறு விவரிப்பது? தான் அனுபவித்த வாதை, வலிகளை ஒரு மனிதன் இவ்வளவு வெளிப்படையாக மெலிதான சுய எள்ளலுடன் பொதுப்படையாக முன் வைப்பதற்கு என்ன ஒரு மனம் வேண்டும்…
சாரு அடிக்கடி சொல்வாரே தன ஆன்மாவையே எழுத்தாக தருவதாக…அது எவ்வளவு சத்தியமான வார்த்தை…சாரு ஜெனசிஸ் க்கு எழுதுவதாக வரும் பகுதிகள் எவ்வளவு ஆழமும் உணர்வும் வாய்ந்தவை…இதைப் படிக்கும் யாராலும் கலங்காமல் இருக்க முடியுமா?
முதல் அத்தியாயத்தை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுக்கும் கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுக்கும் இடையில் என்னுள் ஏற்பட்டது பெரும் ரசனை மாற்றம். கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது நாவல் இன்னும் நீளக்கூடாதா என்றே தோன்றியது…
இனிமேலும் என்னால் வேறு எழுத்தாளர்களின் எழுத்தை முன் போலவே ரசிக்க முடியுமா என்று தோன்ற வில்லை. சாருவின் பாதிப்பு அத்தகையது…
அடுத்து என்ன படிப்பது? ராசலீலா? தேகம்? அல்லது இன்னொரு முறை Zero Degree?”
கார்த்திக் சேதுமாதவன்
Comments are closed.
No comments:
Post a Comment
Your comment goes here...