அலுவலகத்தில் வேலை இல்லாத போதும் Facebook போரடிக்கும் போதும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண நேரத்தில் சிந்தனையில் உதித்தது தான் Blog எழுதும் ஞானோதயம்!
எதையாவது கிறுக்கித் தள்ளிவிடுவது என்ற ஆவேசத்தில் Blog ஆரம்பித்தாயிற்று. சரி, என்ன பெயர் வைப்பது? எதை எதையோ யோசித்த போது தமிழில் பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்து (யார் கண்டது எதிர் காலத்தில் கலைஞர் இதற்கும் ஏதாவது சலுகை அறிவிக்கலாம்!) தேடியபோது ஒன்றும் கிடைக்க வில்லை.
கடைசியில் முன் தினம் பார்த்த 'கோ' திரைப்படத்தின் ஒரு பாடலில் யௌவனம் என்ற வார்த்தை வரக் கண்டு, அர்த்தம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை அந்த பெயரையே வைத்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.
பிறகு, நெட்டில் தேடிய போது பின் வருமாறு விளக்கம் கிடைத்தது.
யௌவனம்
1. இளமை
2. அழகு
3. களிப்பு
விளக்கம்
பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவை
நான்கு தசைகள் (பருவங்கள்) ஆகும்.
அவற்றுள் மூன்றாவது பருவம் யௌவனம் (இளமை) ஆகும்.
பயன்பாடு
1. பருவம் அரும்பும் போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே!
கோமளத்தின் யௌவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட
நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன்
கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையாள முண்டு போர்த்தி
வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்? ( ஆப்பிள் பசி, சாவி)
2. கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது
இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது.
(பொன்னியின் செல்வன், கல்கி)
3. யௌவனம் காத்தல் செய் (புதிய ஆத்திசூடி, பாரதியார்)
யௌவனம் எனது Blog ஐ இளமையாக வைத்திருக்கும் ஒரு முயற்சியே!
No comments:
Post a Comment
Your comment goes here...